search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரணி மாநகர பஸ்"

    ஆரணிக்கு மாநகர பஸ்கள் இயக்காததால் மாதாந்திர பயணச்சீட்டு பெற்ற பயணிகள் பல்வேறு அவதி அடைந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணிக்கு ஆவடி பஸ் டொப்போ மூலம் 10 பஸ்கள் தடம் எண்-580 இயக்கப்பட்டு வந்தது.

    இந்த வழித்தட பஸ்சில் பயணம் செய்ய கடந்த புதன்கிழமை மாலை ஏறிய ஒரு பயணிக்கும் கண்டக்டர் ராஜ்குமாருக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறி போக்குவரத்து துறை ஊழியர்கள் ஆரணி வழி தடத்தில் கடந்த இரண்டு நாட்களாக பஸ்களை இயக்க வில்லை.

    வள்ளளார் நகரில் இருந்து சிறுவாபுரி வழியாக பெரியபாளையம் வரையில் தண்டையார்பேட்டை பஸ் டொப்போ மூலம் 5 பஸ்கள் வழி தடம் எண்-547 இயக்கப்பட்டு வந்தது.

    இந்த பஸ்கடந்த சில நாட்களாக எப்.சி என்றும், கண்டக்டர், டிரைவர் பற்றாக்குறை என்றும் கூறி மூன்று பஸ்சை இயக்கவில்லை.இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    மேலும் அண்ணாநகர் பஸ் டொப்போ மூலம் கோயம்பேட்டில் இருந்து சிறுவாபுரி வழியாக ஆரணிக்கு மூன்று பஸ்கள் இயக்கி வந்தனர். ஆனால், ஏதோ காரணத்தால் ஒரு பஸ்சை கடந்த சில நாட்களாக குறைத்து விட்டனர். இந்த வழித்தடத்தில் தற்போது இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

    நேற்று கிருத்திகை என்பதால் சிறுவாபுரிக்கு செல்லும் மாநகர பஸ் குறைக்கப்பட்டதால் பயணிகள் பல்வேறு அவதி அடைந்தனர்.

    மாதாந்திர பயணச்சீட்டு பெற்ற தனியார் மற்றும் அரசுதுறை ஊழியர்கள் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் மாநகர பஸ்கள் இயக்காததால் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.

    எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆரணி வழித்தடத்தில் இயங்கிய அணைத்து பஸ்களையும் உரிய நேரத்தில் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×